ஆன்லைன் ராஜ யோகா தியானம்
மூன்று வார அறிமுக வகுப்பு

இந்த ஆன்லைன் வகுப்பு வாரத்திற்கு மூன்று நாட்கள் மூன்று வாரங்களுக்கு வழங்கப்படுகிறது.
Week 1 – October 11, 13 and 15, 2021
Week 2 – October 18, 20 and 22, 2021
Week 3 – October 25, 27 and 29, 2021
07:45 to 09:00 PM PDT
இந்த அறிமுக வகுப்பில் நாம் இராஜயோக தியானத்தின் மூலமாக மீண்டும் நமது ஆத்ம சக்தி, அமைதி, நல்லிணக்கத்தை அடையும் வழிகள் மற்றும் அனுபவங்களை அறியலாம். மேலும் ஆத்மாவின் இயல்புகளைத் தெரிந்து கொள்வதோடு, நமது அன்றாட செயல்களும், தேர்வுகளும் ஆத்மாவின் முக்கிய அம்சங்களான மனம், புத்தி, எண்ணம் ஆகிய மூன்றையும் எவ்வாறு பாதிக்கின்றன என்று அனுபவம் மூலம் அறியலாம்.
நம் எண்ணங்களின் சக்தி கொண்டு, மனிதர்களிடையே நல்லிணக்கமும், உறவுகளைச் சீரமைக்கும் வழிகளையும் அறியலாம். நாம் நிபந்தனையற்ற அன்பு பற்றியும், அதன் மூலத்துடன் தொடர்பு கொள்ளும் வழிமுறைகளையும் கண்டறியலாம். அந்த மதிப்புமிக்க கொடையால் நாமும் நிறைந்து, பிறருக்கும் அதை வாரி வழங்கலாம்.
இந்த தியானப்பயிற்சிக்கு எந்த முன்னறிவும் தேவையில்லை.
No prerequisite required.