Tamil –இணைய வழி இராஜயோக தியானம்
Tamil – Online Raja Yoga Meditation
ஒரு அறிமுகம்
மூன்று வாரப் பயிற்சி – ஜனவரி 2021

இந்த வகுப்பு ஒவ்வொரு மாதமும் , வாரம் மூன்று நாட்கள் வீதம் மூன்று வாரங்கள் நடைபெறும்.
வாரம் 1: ஜனவரி 4, 6 & 8
வாரம் 2: ஜனவரி 11, 13 & 15
வாரம் 3: ஜனவரி 18, 20 & 22
காலை மணி 10 முதல் 11.15 வரை
இந்த அறிமுக வகுப்பில் நாம் இராஜயோக தியானத்தின் மூலமாக மீண்டும் நமது ஆத்ம சக்தி, அமைதி, நல்லிணக்கத்தை அடையும் வழிகள் மற்றும் அனுபவங்களை அறியலாம். மேலும் ஆத்மாவின் இயல்புகளைத் தெரிந்து கொள்வதோடு, நமது அன்றாட செயல்களும், தேர்வுகளும் ஆத்மாவின் முக்கிய அம்சங்களான மனம், புத்தி, எண்ணம் ஆகிய மூன்றையும் எவ்வாறு பாதிக்கின்றன என்று அனுபவம் மூலம் அறியலாம்.
நம் எண்ணங்களின் சக்தி கொண்டு, மனிதர்களிடையே நல்லிணக்கமும், உறவுகளைச் சீரமைக்கும் வழிகளையும் அறியலாம். நாம் நிபந்தனையற்ற அன்பு பற்றியும், அதன் மூலத்துடன் தொடர்பு கொள்ளும் வழிமுறைகளையும் கண்டறியலாம். அந்த மதிப்புமிக்க கொடையால் நாமும் நிறைந்து, பிறருக்கும் அதை வாரி வழங்கலாம்.
இந்த தியானப்பயிற்சிக்கு எந்த முன்னறிவும் தேவையில்லை.
No prerequisite required.